வணக்கம்!
ராகு கிரகத்தைப்பற்றி பார்ப்போம். ஒருவருக்கு ராகு தசா நடந்தால் அல்லது ராகு கிரகம் பலமாக இருந்தால் அவருக்கு முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்படும்.
ராகு கிரகம் ஒரு மனநிலையை ஏற்படுத்தாது. நொடிக்கு நொடி மனதைப்போட்டு குழப்பிக்கொண்டு அனைத்திலும் சிக்கலை ஏற்படுத்தகூடிய ஒரு கிரகம். பல நண்பர்களுக்கு ராகு கிரகத்தின் தசா நடக்கும் அவர்களுக்கு எல்லாம் நான் சொல்லும் அறிவுரை பொறுமையாக இரு ஒரு நல்ல முடிவு எடுத்தவுடன் அதன் பிறகு நீங்கள் செய்ய நினைத்தை செய்யலாம் என்பேன்.
நண்பர்களும் சரி என்று போய்விடுவார்கள் கொஞ்ச நாளில் மனது மாறி நீங்கள் சொன்னது சரி தான் இன்று வேறு மாதிரியான ஒரு எண்ணத்தில் இருக்கிறேன் என்று சொல்லுவார்கள்.
ஒவ்வொருவருக்கும் இன்றைய காலகட்டத்தில் எந்த முடிவு எடுத்தால் நல்லது நடக்கும் என்பதில் சிக்கல் இருக்கின்றது அதோடு ராகு தசா நடந்தால் எடுத்த முடிவு நல்லதாகவே அமையாது. வாழ்வில் ஏதோ அவசர முடிவு எடுக்கவேண்டும் என்றால் உங்களின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தை நன்றாக வணங்கிவிட்டு முடிவு எடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment