வணக்கம்!
தசாநாதனைபற்றி சொன்னவுடன் பல போன் அழைப்புகள் வருகின்றன. பல நண்பர்கள் அவர் அவர்களின் சோதிடர்களை அணுகி இதனைப்பற்றி கேட்டுள்ளனர். முக்கால்வாசி சோதிடர்களுக்கு கோச்சாரபலன் மட்டுமே தெரியும். தசாபலனைப்பற்றி அந்தளவுக்கு சொல்லமாட்டார்கள்.
கோச்சாரப்பலன் சொன்னால் அது உங்களுக்கு நடைபெறாது. ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் உற்றுநோக்கினால் உங்களே நன்றாக தெரியும். ஒருவர் குறைந்தது பத்து வருடமாவது நன்றாக வாழ்வார்கள். ஒருவர் குறைந்தது பத்து வருடமாவது கெட்டு போய்விடுவார்கள்.
இதனை எல்லாம் நாம் பார்த்தால் அதில் நமக்கு தெரிவது ஒவ்வொருவருக்கும் ஒரு தசா நல்லது செய்து அவர்களை வாழவைக்கிறது. ஒரு சிலருக்கு ஒரு தசா வந்து அடித்து கீழே தள்ளிவிடுகிறது.
காேச்சாரப்பலனை அவ்வப்பொழுது மாறிக்கொண்டே வரும் ஆனால் ஒரு மாற்றமும் மனிதனுக்கு வராது. ஒரு தசாநாதன் மாறினால் மாற்றத்தை கொண்டு வந்துவிடும்.
நமக்கு வருகின்ற தசாநாதன் நல்லது செய்தால் பரவாயில்லை தீயது செய்தால் அங்கு தான் பிரச்சினை வருகின்றது. குறைந்தது ஆறு வருடங்கள் ஒரு தசா கெடுதலை தந்தாலே வாழ்வில் மிகப்பெரிய அடி ஏற்பட்டுவிடும்.
வாழ்வில் சரிவு ஏற்படாமல் பெரிய முன்னேற்றம் இல்லாமல் இருந்தாலும் கூட கீழே சென்றுவிடாமல் தக்க வைத்துக்கொள்ள தான் உங்களின் ஜாதகத்தை எடுத்து எப்படி தசா நடக்கிறது என்பதை பார்க்க சொல்லுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment