வணக்கம்!
என்னை ஒருவர் சந்திக்க வந்திருந்தார் அவருக்கு வேலையில் பிரச்சினை என்று சொன்னார். வெளிநாட்டில் வேலையில் இருக்கிறேன் இந்த மாதத்தோடு என்னை வேலையில் இருந்து எடுத்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். அந்த வேலை எனக்கு கிடைக்குமா அல்லது போய்விடுமா என்று அவரின் ஜாதகத்தை காண்பித்து கேட்டார்.
அவரின் ஜாதகத்தை பார்த்துவிட்டு நீங்கள் ஒன்றை செய்யுங்கள். நேராக சென்று புதனுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிடுங்கள் என்றேன். அவர் சார் எனக்கு வேலை போய்விடாதே என்று மறுபடியும் கேட்டார். நான் சொன்னேன் புதனுக்கு அர்ச்சனை செய்துவிட்டால் போகாது என்றேன். அவரும் புதனுக்கு அர்ச்சனை செய்தார்.
அவரின் ஜாதகத்தில் அப்பொழுது கொஞ்சம் பிரச்சினை இருந்தது. புதனுக்கு அர்ச்சனை செய்தால் அவரின் ஜாதகத்திற்க்கு வலுசேர்க்கும் என்றேன். அவரும் செய்தார். நீங்கள் செய்யும் வேலைக்கு பிரச்சினை என்றவுடன் உடனே புதனுக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்துவிடாதீர்கள். அவரின் ஜாதகத்தில் அப்படி இருந்தது சொன்னேன்.
உங்களுக்கும் சோதிடத்தில் நல்ல அறிவு இருக்கும் எந்த கிரகம் பிரச்சினை செய்கிறது என்பதும் உங்களுக்கு தெரியும் ஆனால் நீங்கள் என்ன தான் பரிகாரம் செய்தாலும் அந்த பிரச்சினை தீராது. என்ன காரணம் என்றால் சோதிடத்தை தொழிலாக செய்பவன் சொல்லும் வார்த்தை அப்படியே நடக்கும். ஒரு சின்ன அர்ச்சனை செய்தே அடுத்தவனை காப்பாற்றும் உத்தி தெரிந்தவன் தொழில் சோதிடன்.
எப்படி இது எல்லாம் சரியாகுது என்று கேட்கலாம். நானும் என்ன என்னவோ தொழில் செய்து இருக்கிறேன் அதில் இல்லாத ஒரு தொழில் நேர்த்தி ஆன்மீகத்தில் எனக்கு இருக்கின்றது. அதற்கு காரணம் என்னை படைத்தவன் என் தலையில் எழுதி எழுத்து அது. ஒவ்வொருவரும் தொழிலாக சோதிடத்தை செய்பவர்களுக்கு இப்படி தான் எழுதியிருப்பான் இறைவன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment