Followers

Tuesday, April 26, 2016

ராகு சந்திரன் கூட்டணி பலன்


வணக்கம்!
          ராகுவோடு சந்திரன் இணையும்பொழுது தாய்க்கு கண்டத்தை உண்டுபண்ணும். ராகுவோடு இணையும் சந்திரன் கெட்டுவிடும். சந்திரன் மனதுக்காரகன் மட்டுமல்ல தாயுக்கும் காரணம் வகிக்கிறார் என்பதால் தாயுக்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும்.

ஒருவருக்கு தாய் என்பவள் எந்தளவுக்கு முக்கியம் என்பதை குறிக்கும் விதமாக சந்திரனை கொண்டு தாயின் நிலையை கணக்கிட்டார்கள். நமது சோதிடத்தில் சந்திரன் என்ற கிரகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரகம்.

இன்றைக்கு ஒரு சமுதாயம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் அதற்கு ஒவ்வொரு தாயும் நல்லதை சொல்லி தன் பிள்ளையை வளர்க்க வேண்டும். தாய் சரியில்லை என்றால் பிள்ளை எப்படி நன்றாக வளரும்.

ஒருவருக்கு சந்திரனோடு ராகு இணைந்து இருந்தால் பிறக்கும்பொழுதே தற்பொழுது ஜாதகத்தை கணித்துவிடுவது நல்லது. அப்படி இணைந்து இருந்தால் உடனே ராகுவுக்கும் சந்திரனுக்கும் பரிகாரம் செய்துவிடுங்கள். 

மறைவு இடத்திற்க்கு சென்று சந்திரன் ராகுவோடு இணைந்துவிட்டால் தாயின் உயிர்க்கு கூட கண்டம் ஏற்படலாம். சந்திரனோடு இணையும் ராகு அதன் வேலையை காட்டிவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: