வணக்கம்!
ஒருவருக்கு சுக்கிரன் கிரகம் நன்றாக அமைந்தால் அந்த கிரகத்தை வைத்தே பல நன்மைகளை ஜாதகருக்கு கிடைத்துவிடும். குரு கிரகத்திற்க்கு இணையான ஒரு கிரகம் என்றால் சுக்கிரனை சொல்லலாம்.
சுக்கிரன் ஒருவருக்கு நல்லதை செய்தால் அவர் மிகுந்த செல்வாக்கோடு இருப்பார். சுக்கிர கிரகம் பாதிப்படைந்த ஜாதகர்கள் தான் அதிகம் இருப்பார்கள். இதற்கு காரணம் சுக்கிரன் நன்றாக இருந்தால் அனைவரும் நன்றாக இருப்பார்கள். இவர் முக்கால்வாசிபேருக்கு நன்றாக அமைவதில்லை.
ஒவ்வொருவரின் ஜாதகத்தை எடுத்து சுக்கிரன் நன்றாக இருக்கின்றதா என்று பாருங்கள். சுக்கிரன் நன்றாக இருந்தால் நீங்கள் கவலைப்படதேவையில்லை எப்படியும் உங்களை நல்லநிலைமைக்கு கொண்டு சென்றுவிடுவார்.
சுக்கிரன் நன்றாக இல்லை என்றால் நீங்கள் சுக்கிரனுக்கு உரிய பரிகாரத்தை மேற்க்கொள்ளுங்கள். சுக்கிரன் வலுவடைந்து உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும். ஜாதகத்தை பார்த்து தான் இதற்கு பரிகாரம் செய்யவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment