வணக்கம்!
இரவு நேரத்தில் ராகு பலனைப்பற்றி நாம் பார்த்து வருகிறோம். ராகு கிரகத்தைப்பற்றி நான் நிறைய சொன்னாலும் அதில் பல பேர் ஏமாந்துவிடுகிறார்கள் என்பது தான் உண்மை. இன்றைக்கு காதல் திருமணம் என்பது ஒரு நாகரீக மாற்றம் என்பது போல் சொல்லுகின்றார்கள்.
என்ன தான் நாகரீக மாற்றம் எந்த மாற்றம் என்று சொன்னாலும் பெண்ணை பெற்றவர்கள் தான் வளர்த்த பெண் அடுத்தவனிடம் ஓடி சென்றுவிட்டால் என்றால் அந்த பெற்றவர்களின் நிலை வார்த்தையில் சொல்லிவிடமுடியாது. ஒரு பெண் ஓடுகிறது என்றால் கண்டிப்பாக ஜாதகத்தை நாம் பார்த்தால் ஒரு உண்மை தெரியவரும்.
ஜாதகத்தில் ராகு கிரகம் மோசமான தாக்கத்தை கொடுக்கும். ராகு கிரகம் புத்தியை மாற்றி அந்த பெண்ணை அடுத்தவனிடம் ஓடி செல்ல வைத்துவிடும். ஜாதகத்தில் ராகு அப்படி அமைகிறது.
எந்த ஒரு சோதிடனும் ஜாதகத்தை பார்த்தால் அவன் உங்களின் பெண்ணிற்க்கு இப்படி அமைப்பு இருக்கின்றது கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருங்கள் என்று சொல்லுவார். நாம் என்ன செய்வோம் இந்த காதில் வாங்கி அடுத்த காது வழியாக வெளியே விட்டுவிடுவோம்.
சொல்லுகின்ற வழியை கடைபிடித்தால் போதும் ராகு கிரகத்தின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுதலை அடைந்துவிடலாம். சின்ன சின்ன விசயத்தில் கவனத்தை கொண்டாலே போதும் நல்ல வாழ்வு அமைந்துவிடும்.
சொல்லுகின்ற வழியை கடைபிடித்தால் போதும் ராகு கிரகத்தின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுதலை அடைந்துவிடலாம். சின்ன சின்ன விசயத்தில் கவனத்தை கொண்டாலே போதும் நல்ல வாழ்வு அமைந்துவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment