வணக்கம்!
ஆன்மீகவாதியாக மாறினால் எல்லாம் நடந்துவிடும் என்றால் அது தான் தவறான ஒரு கருத்தாக இருக்கும். இன்றைக்கு முக்கால்வாசி பேர் ஆன்மீகவாதியாக மாறிவிட்டார்கள். இவர்கள் எல்லாருக்கும் நல்லது நடந்துவிட்டதா என்ன ?
ஆன்மீகவாதியாக தன்னை மாற்றிவிட்டால் நமக்கு எல்லாம் நடந்துவிடாது. நம்மை ஆன்மீகத்தில் வழி நடத்தும் ஆள் எப்படிப்பட்டவர் என்பதை பொறுத்து தான் நாம் ஆன்மீகத்தில் சாதிப்பதும் நடக்கும்.
இன்றைக்கு பல பேர் ஆண்டியாக சுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு வேண்டுமானால் அது நன்றாக இருக்கலாம் அவர்களின் குடும்பத்தை நினைத்தால் தான் கவலையாக இருக்கின்றது.
எல்லாம் ஆன்மீகமும் உங்களை வழிநடத்தி வாழ்வில் வெற்றி காணவைக்காது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். உங்களை இயக்கும் ஆள் எப்படிப்பட்டவர் என்பதை வைத்து தான் உங்களின் வாழ்க்கை பயணம் இருக்கின்றது.
உங்களை வழிநடத்தும் ஆள் கெட்டிகாரனாக இருந்தால் நீங்கள் எளிதில் அனைத்தையும் அடைந்துவிடமுடியும். அவர் கெட்டிகாரனாக இல்லை என்றால் உங்களையும் கெடுத்து உங்களின் குடும்பத்தையும் கெடுத்துவிடுவார்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment