Followers

Thursday, April 21, 2016

சமையல் அறை


வணக்கம்!
          ஒரு வீட்டிற்க்கு அடுப்பறை என்று சொல்லக்கூடிய சமையல்அறை முக்கியமானது ஏன் என்றால் இது சரியாக இருந்தால் பல விசயங்கள் நல்லதாக நடக்க ஆரம்பித்துவிடும். சமையலறை பொறுத்தவரை வாஸ்துவில் அக்னி மூலையை சொல்லுகின்றனர்.

சமையல்அறை எந்த முலையில் அமையவேண்டும் என்பதை சொல்ல இந்த பதிவை தரவில்லை. சமையல் அறை எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதைப்பற்றி சொல்லுவதற்க்கு இதனை தருகிறேன்.

சமையல் அறை எப்படி இருக்கின்றது என்பதை நான் ஒவ்வொரு வீடுகளுக்கும் செல்லும்பொழுது கவனிப்பது உண்டு. சமையல் அறை எந்த திசையில் இருந்தாலும் அதனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் மிகவும் சுத்தமாக துடைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் திலகம் இடவேண்டும்.

ஒரு திருமணம் அல்லது ஏதோ விஷேசத்திற்க்கு முதலில் சமைக்கும்பொழுது பார்த்தால் அதற்கு என்று ஒரு சின்ன பூஜை செய்துவிட்டு அதன் பிறகு சமைக்க ஆரம்பிப்பார்கள். எந்த வித அசம்பாவிதம் நடக்காமல் இருக்க இந்த பூஜை உண்டு.

உங்களின் வீட்டில் சமையல் அறையில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று சமையல் செய்ய தொடங்கும்பொழுது மஞ்சள் குங்குமம் திலகம் இட்டு சாம்பிராணி போட்டு தீபம் காட்டி அதன் பிறகு சமைக்க தொடங்குங்கள். உங்களின் குடும்பம் சிறந்து விளங்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: