வணக்கம்!
நான் சோதிடம் பார்த்து பலனை சொன்னாலும் உண்மையான பிரச்சினை என்பது அவர் அவர்களுக்கு மட்டுமே தெரியும் ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவர்களுக்கு இருக்காது.
ஒரு தவறை செய்துவிட்டு வந்து இருப்போம் அந்த தவறை நமது மனது அது தவறு என்றே ஏற்றுக்கொள்வதில்லை. நாம் செய்தது தவறு என்று ஏற்றுக்கொள்வது கிடையாது. வாழ்வில் கடைசி வரை அது தவறு என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நாம் நமது சந்ததிக்கு பெரிய கெடுதலை செய்துவிட்டு போகிறோம் என்று அர்த்தம்.
என்னைவிட வயது மூத்தோர்கள் வந்து என்னிடம் சோதிடம் பார்த்து இருக்கின்றார்கள். அவர்களிடம் நான் இதனை சொல்லுவது உண்டு ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வதே கிடையாது.
நாம் ஒரு சாட்சியாக இருந்து அனைத்து பிரச்சினையும் அலசி ஆராய்ந்து பார்த்தால் பெரிய பிரச்சினையை எளிதில் சமாளிக்கும் ஒரு நல்ல கருத்து நமக்கு கிடைத்துவிடும்.
நாம் செய்த தவறை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக நமக்கு விமோசனம் என்பது கிடைக்காது. விமோசனம் கிடைக்கவேண்டும் என்றால் தவறை ஒப்புக்கொள்ளவேண்டும்.
ஒன்பது கிரகங்களும் நம்மை தாக்குவதற்க்கு முன்பு தவறை திருத்திக்கொண்டு நாம் செயல்பட்டால் நமக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்துவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment