வணக்கம்!
இராகு சூரியன் கூட்டணியாக அமைந்தால் அந்த நபர் ஒரு அரசு அலுவலகராக இருந்தால் அந்த நபர் நிறைய சம்பாதிப்பார். அதாவது ராகுவும் சூரியனும் நன்றாக இணைந்து இருந்தால் சம்பளத்தை விட லஞ்சம் அதிகம் வாங்குபவராக இருப்பார்.
இன்றைய காலத்தில் சம்பளத்தை விட லஞ்சம் அதிகம் வாங்குகிறார்கள். லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் நிறைய சம்பாதிப்பது போல் இருக்கும் ஆனால் அவர்களின் குடும்பத்தில் பெரிய ஓட்டை இருக்கும். ஓட்டை என்று சொல்லுவது ஏதோ ஒரு பிரச்சினையை அதிகம் சந்திப்பவராக இருப்பார்கள்.
நான் நிறைய அரசு அதிகாரிகளை பார்த்து இருக்கிறேன். லஞ்சம் வாங்கும் நபர்களின் குடும்பம் பார்ப்பதற்க்கு நன்றாக இருப்பது போல் இருக்கிறது. கொஞ்ச நாளில் அதிக பிரச்சினையை சந்திக்கிறார்கள்.
இராகு சூரியன் நன்றாக அமைந்தால் மிகப்பெரிய அளவில் கொள்ளை அடிப்பவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் இதனை நல்லது என்று நினைக்கலாம் கொஞ்ச நாளில் இவர்கள் மாட்டுவதும் உண்டு.
இராகு சூரியன் கூட்டணி நன்றாக அமைந்தால் நல்லது நடக்கும் கொஞ்சம் பாதிப்படைந்தால் ஏதாவது ஒரு லஞ்சத்தில் மாட்டி சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். அவர் அவர்களின் சொந்த ஜாதகத்தை பார்த்து அதனை தெரிந்துக்கொள்ளவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment