Followers

Tuesday, April 5, 2016

செவ்வாய் தோஷம்


ணக்கம்!
          செவ்வாய் என்றாலே திருமண தோஷம் என்பதை பார்த்து தான் அதிக பேர் பயப்படுவார்கள். சோதிடம் தெரியாதவன் கூட செவ்வாய் தோஷமா என்று பயப்பட்டவர்கள் தான் அதிகம் இது இப்பொழுது கொஞ்சம் பயம்போய்விட்டது என்று வைத்துக்கொள்ளலாம் மக்களிடம் சோதிட அறிவு அந்தளவுக்கு சென்று இருக்கின்றது.

செவ்வாய்தோஷம் ஒருவருக்கு இருக்கின்றது என்றால் அவர்க்கு கோபம் அதிகமாக இருக்கின்றது என்று அர்த்தம். செவ்வாய்தோஷம் உடையவர்கள் அதிக கோபக்காரர்களாக இருப்பார்கள்.

திருமண வாழ்வில் கோபம் அதிகமாக இருந்தால் அந்த வாழ்வு அதிகம் நீடிக்காது என்பதால் செவ்வாய்தோஷத்தை அதிகமாக கணக்கில் எடுத்துக்கொண்டார்கள். பொதுவாக இன்று பெண்களுக்கு அதிகம் கோபம் இருக்கின்றது.  அனைவருக்கும் செவ்வாய் தோஷம் இருக்கின்றது என்றால் இல்லை என்று தான் சொல்லமுடியும் வேறு ஏதோ தோஷம் இருக்கின்றது என்று எடுத்துக்கொள்ளலாம்.

செவ்வாய் தோஷம் உங்களுக்கு இருக்கின்றது என்றால் நீங்கள் செவ்வாய்கிழமை அன்று விரதம் இருந்தாலே போதும். செவ்வாய்தோஷம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். நீங்கள் வரன் பார்க்கும்பொழுதும் இதனைக்கண்டு அஞ்சதேவையில்லை. இப்படிப்பட்ட விரதமுறையை அனுசரித்து வந்தாலே போதும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: