வணக்கம்!
தொடர்ந்து நமது நண்பர்கள் என்ன சார் வெளியூர் பயணம் இல்லையே என்று கேட்டனர். நீண்ட நாள்கள் தொடர்பில் இல்லாத நண்பர்கள் கூட என்ன சார் வெளியூர் பயணம் இல்லை என்று கேட்டனர். சொந்தவேலை காரணமாக ஊரில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டவிட்டது. விரைவில் இதில் இருந்து விடுப்பட்டு வெளியூர் பயணம் இருக்கும். அவசரம் என்று சொல்லுபவர்களுக்கு சொந்த ஊருக்கு வரவழைத்து பூஜை செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.
நமது நண்பர்களில் ஒரு சிலருக்கு அதிகப்படியான நீசம் பெற்று கிரகங்கள் அமைந்து விடுவது உண்டு. ஒரு கிரகம் நீசம் பெற்றால் அந்த கிரகத்தின் இருந்து வரும் பலன் குறைந்துவிடும். உதாரணத்திற்க்கு செவ்வாய் நீசம் பெறுகின்றது என்று வைத்துக்கொள்வோம். செவ்வாய் காரத்துவம் உள்ள விசயங்கள் கிடைக்காமல் போய்விடுவது உண்டு.
தற்பொழுது தான் நாம் சோதிடம் படித்துவிட்டோம் அல்லவா அதனால் எதையாவது செய்து அதில் இருந்து விடுபட்டுவிடுவோம் அல்லவா. அந்த வழியில் முயற்சி செய்து பெறுங்கள். அதோடு நீசம் பெற்ற கிரகத்தின் காரத்துவம் என்ன என்று பார்க்க தெரிந்துக்கொண்டு அது நமக்கு கிடைத்து இருக்கின்றதா என்றும் பார்க்கவேண்டும்.
ஒரு சிலருக்கு நீசம் பெற்ற கிரகம் வக்கிரமாக இருந்தால் கிடைப்பதற்க்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது. வக்கிரம் பெற்று நீசம் பெற்ற கிரகத்தின் பலன் கிடைக்கவில்லை என்றால் வக்கிரத்திற்க்கு என்று உள்ள கோவில்களுக்கு சென்று வணங்கினால் நீசம் பெற்று வக்கிரம் அடைந்த கிரகத்தின் பலன் கிடைக்கும்.
நீசம் தான் பெற்றுவிட்டது அதனால் நமக்கு பிரச்சினை இல்லை என்று இருக்காமல் நமக்கு என்ன தேவையோ அதனை குறிக்காேளாக பெற்று நீசம் உள்ள கிரகத்தின் தன்மையும் பெறவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment