வணக்கம்!
ஒவ்வொருவரும் வருடத்திற்க்கு ஒரு முறையாவது தங்களின் ஜாதகத்தை பார்த்துவிடுவது நல்லது. நமக்கு என்ன நடந்துவிடபோகின்றது என்று மேதாவி தனமாக இருந்துவிடாமல் ஜாதகத்தை கொஞ்சம் பார்த்துவிடுவது நல்லது.
பல நண்பர்கள் என்னிடம் அவர்களின் ஜாதகத்தை கொடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களை கூப்பிட்டு நாம் பலனை சொல்லுவது தற்பொழுது குறைந்துவிட்டது அதற்கு காரணம் வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. கடந்த காலத்தில் எல்லாம் எப்படியும் நானே கூப்பிட்டு சம்பந்தப்பட்டவர்களின் ஜாதகத்தின் பலனை சொன்னேன் தற்பொழுது முடியவில்லை.
என்னிடம் மறுபடியும் சோதிடம் பார்க்கவேண்டும் என்பதற்க்காக இதனை சொல்லவில்லை நீங்களாகவே கூட உங்களின் ஜாதகத்தை எடுத்து பலனை பார்த்துக்கொள்ளுங்கள்.
கிரகங்கள் ஒரு சில ஏமாற்றத்தை கொடுத்துவிடும் வந்தபிறகு நாம் ஜாதகத்தை தூக்கிக்கொண்டு பார்ப்பதை விட முன்கூட்டியே பார்த்துவிடுவது நல்லது. வரும்முன் காக்க நாம் நினைத்தாலும் கிரகங்கள் விடாது.
ஜாதகம் எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்று முடிவு செய்து உடனே ஜாதகத்தை பார்த்துவிடுங்கள். கிரகங்கள் எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றன தசா எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு ஏதாவது வழிபாடு செய்யவேண்டுமா என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.
நீங்களே ஜாதகத்தை பார்ப்பது என்றால் சம்பந்தப்பட்ட கிரகத்திற்க்கு முதலில் பரிகாரம் செய்துவிட்டு தெய்வத்திடம் முறையிடுங்கள். கிரகத்தை சாந்தப்படுத்தாமல் தெய்வத்திடம் முறையிட்டு பலன் இல்லை. தமிழ்வருட பிறப்பு நடந்திருக்கிறது ஜாதகத்தை பார்க்கவேண்டும் அல்லவா. உடனே ஜாதகத்தை எடுத்து பார்க்க ஆரம்பியுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment