வணக்கம்!
சந்திரனின் வீடான கடகராசியில் சனி அமர்ந்தால் அவர்களின் திருமணவாழ்வு என்பது கேள்வி குறியாக மாறிவிடும். தனித்து வாழவேண்டிய நிலையை ஏற்படுத்திவிடுவார்கள்.
தனுசு லக்கினத்திற்க்கு எட்டாவது வீடாக கடகராசி வரும் அதில் சனி அமர்ந்தால் திருமணவாழ்வு என்பது பிரச்சினை தான். பெண்களின் ஜாதகத்தில் இப்படி அமரக்கூடாது. ஆண்கள் என்றால் தாமதமாக திருமணம் நடைபெறும். திருமணத்தையும் தாமதமாக வைத்துக்கொண்டால் நல்லது.
சந்திரனுக்கும் சனிக்கும் கொஞ்சம் பிரச்சினை தான் இரண்டும் சேர்ந்து இருந்தாலும் பிரச்சினை அப்படி இல்லை என்றால் சந்திரனின் வீட்டில் சனி அமரும்பொழுது பிரச்சினை. சந்திரனும் சனியும் பரிவர்த்தணை ஆவது பிரச்சினை கொடுக்கிறதாக அனுபவத்தில் இருக்கின்றது.
என்ன நடக்கும் என்பதை பார்த்துவிட்டோம் இனி அதற்கு பரிகாரம் தேடவேண்டும் அல்லவா. சனி மற்றும் சந்திரன் என்ற கிரகம் வரும்பொழுது அதிகம் சிவனை காட்டுவதால் சிவவழிப்பாட்டை மேற்க்கொள்ளலாம் என்று பொதுவாக சொல்லுவது உண்டு.
ஒரு சிலர் தனியாக இதற்க்காக பூஜை செய்யவேண்டும் என்றும் நினைப்பார்கள். அவர்கள் என்னை தொடர்புக்கொண்டு எப்படி செய்யலாம் என்பதை அவர்களின் ஜாதகத்தை அனுப்பி முடிவுசெய்துக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment