Followers

Tuesday, April 26, 2016

பாவம் நீங்கும் காலம்


ணக்கம்!
          நேற்று ஒரு நண்பரோடு பேசிக்கொண்டு இருக்கும்பொழுது ஒரு சில விசயங்களை பதிவில் சொல்லவேண்டும் என்று தோன்றியது. இந்த பதிவை படிக்கும் நண்பர்கள் அனைவரும் அந்தளவு பெரிய பாவம் எல்லாம் செய்துவிடவில்லை. பின்பு ஏன் கஷ்டம் வருகின்றது என்று பலரின் கேள்வியாக இருக்கும்.

எதற்க்கும் கர்மாவை நாம் கைகாட்டுவோம். நமக்கு வரும் பிரச்சினை எல்லாம் நம்மால் மட்டும் வருவதில்லை நமது பெற்றோர்கள் அதற்கு முன் உள்ளவர்களாலும் வருகின்றது. நம் பெற்றோர்கள் என்ன செய்தார்கள் என்று கூட நமக்கு தெரியவில்லை. அதற்கு முன் உள்ளவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பது கண்டுபிடிக்கமுடியாத ஒன்று.

நம்ம என்ன பெரிய பாவம் செய்துவிடபோகின்றோம். நாம் தற்பொழுது முன்னோர்கள் செய்த பாவத்திற்க்கு தீர்வு காண்கிறோம். அதனால் தான் நான் பல பேர்களிடம் சொல்லுவது கொஞ்சம் பொறுமையாக இருங்கள் படிப்படியாக அனைத்தையும் நடத்துவோம் என்று சொல்லுவது உண்டு.

நாம் மட்டும் ஒரு பாவத்தை செய்து இருந்தால் இதனை எளிதில் மாற்றிவிடலாம். நாம் செய்கின்ற பரிகாரம் உடனே வேலை செய்துவிடும். நம்முடைய முன்னோர்களுக்கும் சேர்த்து செய்ய வேண்டி இருப்பதால் தான் கொஞ்சம் காலம் எடுக்கிறது.

நம்மிடம் வந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் தற்பொழுது தான் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ ஆரம்பித்து இருக்கிறார்கள். அதாவது கடும்பிரச்சினையில் இருந்து வந்தவர்களுக்கு எல்லாம் தற்பொழுது ஒரளவு நல்ல வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டார்கள். படிப்படியான ஒரு ஆன்மீகத்தை சார்ந்த ஒரு விசயத்தை செய்துவருவதால் இது சாத்தியப்பட்டு இருக்கின்றது.

ஒன்றுமே இல்லாத குடும்பங்கள் எல்லாம் தற்பொழுது ஒரு நல்ல குடும்பவாழ்க்கை அமைந்து இருக்கின்றது என்றால் நம் பாவத்தையும் நம் பெற்றோர்களின் பாவத்தையும் நமது முன்னோர்களின் பாவத்தையும் தொலைத்த காரணத்தால் முடிந்தது. தொடர்ந்து ஆன்மீகத்தில் இருந்து வரும்பொழுது மட்டுமே அனைத்து பாவமும் போகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: