வணக்கம்!
நமது பதிவை படித்துவிட்டு சார் நீங்கள் ஒவ்வொரு பதிவிற்க்கு பரிகாரத்தை சொல்லிவிடுங்கள் என்று நமது நண்பர்கள் கேட்பார்கள். முடிந்தவரை நான் சொல்லிக்கொண்டு தான் வருகிறேன். இதில் ஒரு சூட்சமமும் இருக்கின்றது.
எங்களை போல் தொழில்முறையில் சோதிடம் பார்ப்பவர்கள் உள்ளுக்குள் பல வேலைகளை செய்வது உண்டு. என்னை தேடி வந்து அல்லது எங்களை தொடர்புக்கொண்டு உங்களின் ஜாதகத்தை காண்பிக்கும்பொழுது மட்டுமே உங்களுக்கு நல்லது நடக்க ஆரம்பிக்கும்.
நீங்களாகவே செய்யும் பரிகாரம் என்பது அந்தளவுக்கு பலனை கொடுப்பதில்லை என்பது மட்டுமே உண்மை என்று சொல்லலாம். உலகத்தில் எத்தனையே தொழில் இருக்கின்றது அதனை எல்லாம் விட்டுவிட்டு இந்த தொழிலை செய்ய ஆண்டவன் விட்டு இருக்கிறான் என்றால் சும்மாவா
நான் பல பேருக்கு பரிகாரத்தை அவர்களே செய்ய வேண்டும் என்று விட்டால் கூட பரிகாரம் செய்வதற்க்கு முன்பு என்னை கூப்பிட்டு சொல்லிவிட்டு செய்யவேண்டும் என்று சொல்லுவது உண்டு.
உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு என்னை சந்திக்கும்பொழுது உங்களுக்கு ஏதாவது ஒன்று நல்லது நடக்கும் அது என்ன மாயம் என்றால் அம்மன் வேலை செய்துவிடும்.தொழில்முறை சோதிடம் என்கிறபொழுது இதனை எல்லாம் செய்தால் தான் எங்களால் தொழில் செய்யமுடியும்.
பதிவில் முடிந்தளவு பரிகாரத்தை சொல்லுகிறேன் அதனை செய்துபாருங்கள் அது தவறு இல்லை ஆனாலும் என்னை சந்தித்து உங்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment