Followers

Thursday, April 7, 2016

திருமண பொருத்தம்


வணக்கம்!
          ஒவ்வொருவருக்கும் திருமணத்தைப்பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். தனக்கு வரும் கணவன் அல்லது மனைவி நன்றாக அமையவேண்டும் என்பதில் மிகவும் எதிர்பார்ப்போடு இருப்பார்கள். ஒவ்வொருவரும் இதற்க்காக நிறைய வேண்டுதல்களை வைக்கிறார்கள்.

திருமணவாழ்வில் நிறைய எதிர்பார்ப்பு இருந்தாலும் அவர் அவர்களின் பெற்றோர்கள் செய்த நல்ல விசயத்தை அடிப்படையாக கொண்டு வாரிசுகளுக்கு திருமண வாழ்வு அமைகிறது.

ஒரு சிலருக்கு அவர்கள் அதிகமாக தன்னை ஆன்மீகவிசயத்தில் ஈடுபாடு வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரளவு நல்ல துணை கிடைக்கிறது. பெரும்பாலும் பெற்றோர்களின் புண்ணியத்தை பொறுத்து அது அமையும்.

ஜாதகம் ஒரளவு வேலை செய்தாலும் அவர் அவர்களின் பெற்றோர்கள் செய்த நல்லது முன்னாடி நிற்கிறது. பெற்றோர்கள் நல்லது செய்து இருந்தால் அவர்களின் வாரிசுகள் சந்தோஷமான ஒரு வாழ்வை வாழ்வார்கள். கெடுதல் அதிகம் இருந்தால் வாரிசுகள் பாதிப்படைக்கிறார்கள்.

என்னிடம் சோதிடம் பார்க்கும் நண்பர்களிடம் சொல்லுவது அதுவும் பொருத்தம் பார்க்கும் நண்பர்களிடம் சொல்லுவது நிறைய தோஷங்களை கண்டு பயப்படவேண்டாம். நீங்கள் செய்யும் புண்ணியம் உங்களை காக்கும் என்று சொல்லுவேன்.

நிறைய தோஷம் உடையவர்கள் கூட நல்ல வாழ்வை வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களின் மேற்க்கொள்ளும் ஆன்மீகம் தான் காரணம் என்று சொல்லமுடியும். நம்ம அப்பா செய்த பாவத்திற்க்கு நாம் என்ன செய்யமுடியும். நாம் நல்லது செய்து நமக்கும் நமது வாரிசுக்கும் புண்ணியம் சேர்த்துவிடவேண்டியது தான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: