Followers

Sunday, April 17, 2016

ராகு சூரியன் கூட்டணி பலன்


ணக்கம்!
          ராகுவைப்பற்றி பார்த்தோம் இதில் கொஞ்சம் அதிகமாக ஒரு கிரகத்தை சம்பந்தப்படுத்தி பார்ப்போம். ராகு கிரகம் சூரியனோடு சேர்ந்தால் எப்படிப்பட்ட பலனை அது தரும் என்பதை பார்க்கலாம்.

ராகுவும் சூரியனும் சேர்ந்து இருப்பது அந்தளவுக்கு நன்மையளிப்பது கிடையாது. ஒரு சில ஜாதகத்தில் மட்டும் நன்மையளிக்கிறது. ராகு சூரியன் சேரும்பொழுது வெளிநாடுகளுக்கு சென்று அங்கு அரசு துறை சம்பந்தப்பட்ட இடத்தில் பணிபுரியும் வாய்ப்பு அமையும்.

இந்தியாவில் இருந்தால் அரசு துறையில் கணிணி சம்பந்தப்பட்ட இடத்தில் வேலை செய்வார்கள். ஒரு சிலருக்கு அரசியல் வாய்ப்பையும் இந்த கூட்டணி உருவாக்கிறது. ராகு சூரியன் சம்பந்தப்பட்டு இருப்பதால் சட்டத்துறையில் வேலை வாய்ப்பை உருவாக்கும். ஒரு சிலர் காட்டு இலாக்கா சம்பந்தப்பட்ட துறையிலும் வேலை வாய்ப்பை உருவாக்கும். 

வேலை சொன்ன விசயத்தில் சம்பந்தப்பட்டு ஒருவர் இருப்பார். அதில் இருந்து லாபமோ அல்லது நஷ்டமோ ஏற்படுவது எல்லாம் அவர் அவர்களின் சுயஜாதகத்தை வைத்து பார்த்து சொல்லவேண்டும்.

முடிந்தவரை இந்த துறையில் இருந்து சம்பாதிக்கும் வாய்ப்பை அதிகம் பெறலாம். ஒரு சிலருக்கு அரசு துறை கிடைக்காமல் போனால் கூட அந்த துறை சம்பந்தப்பட்டு வருமானம் வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: