வணக்கம்!
ஒருவருடைய ஜாதகத்தை எடுத்து நாம் சந்திரன் எப்படி இருக்கின்றார் என்று பார்த்தாலே போதும் அவர் நன்றாக வாழ்வாரா அல்லது வாழ்வில் தோல்வியை அதிகம் சந்திப்பாரா என்று நாம் தெரிந்துக்கொண்டுவிடலாம்.
முதலில் உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அந்த ஜாதகத்தில் சந்திரன் எங்கு உள்ளது என்று பாருங்கள். மறைவுஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதா அல்லது நல்ல இடத்தில் அமர்ந்துள்ளதா என்று பாருங்கள்.
சந்திரன் மறைவுஸ்தானத்தில் அமர்ந்து இருந்தால் அந்த ஜாதகர்களுக்கு அவர்கள் நினைக்கும் வாழ்வு கிடைக்காது. கடுமையான போராட்டம் இருக்கும் கிடைக்கும் ரிசல்ட் குறைவாக இருக்கும்.
பெரிய பேர் எல்லாம் எடுக்கமுடியவில்லை என்று சொல்லுபவர்களுக்கு எல்லாம் சந்திரன் மறைவுஸ்தானத்தில் இருப்பதும் ஒரு குறை என்றே சொல்லலாம். சந்திரன் நல்ல இடத்தில் இருந்தால் அவன் சும்மா உட்கார்ந்து இருந்தாலும் அவனை தேடி அனைத்தும் செல்லும்.
சந்திரன் ஒருவருடைய ஜாதகத்தில் தேய்பிறை சந்திரனாக இருந்தால் அவன் வாழ்க்கை பிரகாசமாக எரிவது போல் எரிந்து வாழ்வில் பாதிக்கு மேல் துன்படுபவர்களாக இருப்பார்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment