Followers

Wednesday, April 6, 2016

கிரகநிலை


வணக்கம்!
          ஒருவர் என்னிடம் வந்து ஜாதகபலனை கேட்டார் என்றால் அவர்க்கு உடனே நான் பரிகாரத்தை பரிந்துரைப்பதில்லை. பரிகாரம் சொன்னாலும் மிகச்சிறிய அளவில் பரிகாரத்தை பரிந்துரைப்பது உண்டு.  இன்றைய தேதியில் பல நண்பர்கள் என்னை சந்திக்கும்பொழுதே உடனே பரிகாரத்தை செய்து தரகேட்பார்கள் நான் அவ்வளவு எளிதில் சம்மதிப்பதில்லை.

நான் சொன்ன பலன் அவர்களுக்கு நடக்கவேண்டும் அதன்பிறகு அவர்களுக்கு நாம் பரிகாரம் அல்லது விஷேசமான ஹோமத்தை செய்துக்கொடுக்கலாம் என்று நினைப்பேன்.  ஒரு சில அவசரகாலத்தில் மட்டும் உடனே பரிகாரத்தை செய்யுங்கள் என்று சொல்லுவது உண்டு.

இன்றைய தேதியில் நிறைய வாடிக்கையாளர்களை பெற்று இருப்பதற்க்கு இதன் காரணம். நாம் சொன்ன பலன் மற்றும் அவர்களுக்கு நாம் கொடுக்கும் ஆலோசனை சரியாக அமையும்பொழுது நம்மை நோக்கி நண்பர்கள் கூட்டம் வந்துக்கொண்டே இருக்கின்றது.

நாம் சொல்லுகின்ற பலனுக்கு வெற்றி என்பது அம்மன் ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு அமைந்த கிரகநிலை என்பது அதனை செய்கிறது. ஒரு சிலர் ஒரு சில தொழிலில் மிகச்சிறந்த வல்லுனர்களாக இருப்பதற்க்கு அவர்களுக்கு அமைந்த கிரகநிலை தான் காரணம்.

இந்த தொழிலை நாம் செய்யும்பொழுது நமக்கு அமைந்த கிரகநிலை நமக்கு சாதகமாக இருக்கும்பொழுது நமக்கு அந்த தொழில் வெற்றி கிடைக்கும். அதுபோலவே எனக்கு அமைந்த கிரகநிலை இதனை வெற்றிகரமாக செய்கிறது.இதனை நான் ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் யார் யார் எதனை செய்யவேண்டும் என்பதை கிரகநிலை தீர்மானிக்கிறது. அதனை அவன் செய்யும்பொழுது நல்ல பலனை அவன் எதிர்பார்க்கலாம்.

உங்களுக்கு அமைந்த கிரகநிலையை சற்று ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு எந்த தொழில் சரியாக இருக்கின்றது என்று பார்த்து அதனை தேர்ந்தெடுத்து செய்யுங்கள். நீங்கள் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் சாதிக்கமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: