Followers

Monday, April 18, 2016

இராகு சூரியன் கூட்டணி பலன்


வணக்கம்!
          இராகு சூரியன் இணைந்தால் அதன் நல்ல பலனைப்பற்றி நேற்று பார்த்தோம். இன்று தீயபலன் என்ன என்று பார்க்கலாம். இராகு சூரியன் இரண்டும் சேரும்பொழுது தந்தை வழி உறவு நன்றாக இருக்காது.

சூரியன் தந்தை காரகனாக இருப்பதால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள் பிரச்சினை ஏற்படும். தந்தை வழியில் இன்று பகை இல்லாத குடும்பங்களே இல்லை என்று சொல்லலாம். இராகு சூரியன் இணையும்பொழுது பிரச்சினை இன்னும் அதிகமாக இருக்கும் என்று சொல்லவேண்டியது தான். தமிழ்நாட்டில் தீர்க்கமுடியாத பிரச்சினை பல தந்தை வழி உறவினர்களால் பல குடுங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இராகு சூரியன் இணையும்பொழுது உடலில் அதிகபடியான சூட்டை கிளப்பும். ஒரு சிலருக்கு உடலில் கட்டிகள் ஏற்படும்.வெயிலில் எல்லாேருக்கும் கட்டிகள் ஏற்பட்டாலும் இராகு சூரியன் இணையும்பொழுது கொஞ்சம் அதிகம் என்று சொல்லலாம்.

இன்றைய காலத்தில் புற்றுநோய் பத்து பேரில் எட்டு பேருக்கு இருக்கின்றது அதற்கு காரணம் இதன் கூட்டணி என்று சொல்லலாம். பெரும்பாலும் இது எட்டாவது வீட்டில் அல்லது ஆறாவது வீட்டில் இணையும்பொழுது இப்படி ஏற்படலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: