Followers

Tuesday, April 12, 2016

செவ்வாய் பலம்


வணக்கம்!
          செவ்வாய் கிரகம் ஒருவருக்கு தோஷத்தை தரும் நிலையில் இருந்தால் அவர்கள் பெரும்பாலும் தன்னுடைய கோபத்தால் அழிந்தவர்களாக இருப்பார்கள். 

நான் நிறைய பேர்களை சந்தித்த அனுபவத்தை பெற்று இருக்கிறேன். பல பேர்களுக்கு என்னுடைய அறிவுரையை சொல்லிருக்கிறேன் உங்களுக்கு செவ்வாய் இப்படிப்பட்ட நிலையில் இருக்கின்றது. செவ்வாய் கிரகம் உங்களை கோபத்தால் கவிழ்த்துவிடும் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருங்கள் என்பேன்.

பல பேர்கள் இதனை உணர்ந்துக்கொண்டு திருந்தி இருக்கிறார்கள். பல பேர்கள் செவ்வாய் கிரகத்தால் பாதிக்கப்பட்டு என்னை கூட கோபத்தால் தொடர்புக்கொள்ளாத நிலையில் சென்றும் இருக்கிறார்கள்.

செவ்வாய் கிரகம் தன்னுடைய வேலையை பல காரத்துவத்தில் காட்டினாலும் கோபத்தில் காட்டுவது அதிகம் அதனால் கோபத்தை மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருங்கள். தன்னை கட்டுபடுத்தமுடியாத ஒரு கோபத்தை செவ்வாய்கிரகம் ஏற்படுத்துவதால் இவர்கள் திசைமாறி செல்லுகிறார்கள்.

உங்களுக்கு செவ்வாய் இப்படி செய்கிறது என்றால் முதலில் கோபம் வந்தால் எதிர்வினை செய்யாமல் இருங்கள். கோபத்தை குறைக்கும் வழி என்ன என்பதை யோசியுங்கள். செவ்வாய் கிரகத்திற்க்கு என்ன பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும் என்பதையும் பாருங்கள். கண்டிப்பாக ஒரு நல்ல நிலைக்கு உங்களால் வரமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: