Followers

Tuesday, April 19, 2016

அனுபவம்


ணக்கம்!
         நம்மை சந்திக்கும் நண்பர்கள் நடந்துக்கொள்ளும் விதத்தைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன். இன்று தான் அதற்கு ஒரு வாய்ப்பு அமைந்தது.

நம்மை சந்திக்கும் நண்பர்கள் பல பேர் ஏதோ பிரச்சினை இருந்தால் அவர்கள் என்னிடம் காட்டுவார்கள். மனதில் தேங்கும் கஷ்டத்தை கொட்டுவதற்க்கு ஒரு ஆள் வேண்டும் ஒவ்வொருவரும் கொட்டுகிறார்கள் இது பிரச்சினை இல்லை.

ஒரு சிலர் கோபத்தில் என்னிடமே சண்டை போடுகிறார்கள். அதாவது சார் நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன் அவனை நான் கொல்லாமல் விடபோவதில்லை. என்னிடம் வந்தால் அவனை நான் வெட்டி சாய்க்க போகிறேன் என்பார்கள்.

ஏதோ இவர்களுக்கும் அடுத்தவர்களுக்கும் பிரச்சனை இருக்கும். இந்த பிரச்சினையை சம்பந்தப்படுத்தி நண்பர்களும் ஆவேசம் அடைவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் பிரச்சினை ஏற்படுவது இயல்பு அதனை அமைதியாக இருந்து தான் சமாளிக்கவேண்டுமே தவிர கோபத்தை காட்டகூடாது.

எந்த ஒரு நேரத்திலும் அமைதியாக இருந்து காரியத்தை சாதிக்க பாருங்கள். நான் அவனை வெட்டுகிறேன் இவனை வெட்டுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்ககூடாது. நம் அமைதியை கெடுக்க பல கிரகங்கள் வேலை செய்து மாட்டிவிட்டுவிடும் அப்புறம் கஷ்டப்படுபவர்கள் நாமாக தான் இருப்போம்.

இன்றைய காலத்திலேயே இப்படி மக்கள் பேசிக்கொண்டு இருக்கின்றனர். நம்மை ஆண்ட வெள்ளைக்காரன் காலத்தில் நம்ம மக்களை பார்த்து அவன் என்ன நினைத்து இருப்பான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: