Followers

Thursday, April 21, 2016

தசாநாதன்


ணக்கம்!
          ஒரளவு சோதிடம் தெரிந்தவர்களுக்கு கூட தசாநாதன் முக்கியம் என்று சொல்லுவார்கள். தெரியாதவர்கள் தான் கோச்சாரப்பலனை பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு இருப்பார்கள்.

கோச்சாரப்பலன் ஒரளவு தான் பலனை கொடுக்கும். தசாநாதன் நன்றாக பலனை கொடுத்தால் கோச்சாரப்பலன் வழியாக வரும் தீமை விலகிவிடும். ஒரு சிலருக்கு தீமை தரக்கூடிய கோச்சாரப்பலன் நடைபெறும் காலத்தில் கூட நன்மை தசாநாதன் நன்றாக வேலை செய்யும்பொழுது அந்த தீமை குறைந்துவிடுகிறது.

தசாநாதன் நான் தான் தலைவன் என்பது போல தன் தசாவை நடத்திக்கொண்டு இருக்கும். ஜாதகருக்கு நன்மையாக வாரி வழங்கிக்கொண்டு இருக்கும்.

ஒரு சிலருக்கு தசாநாதன் நன்றாக இருக்கும்பொழுது அதற்குள் வரும் புத்திநாதன் கெடுதல் தந்தால் கூட தசாநாதன் நன்மை கொடுத்துக்கொண்டு இருக்கும்.

தசாநாதன் நன்றாக வேலை செய்தால் அவர்கள் சோதிடத்தை அந்தளவுக்கு நம்புவது கிடையாது. அதற்கு காரணம் அவர்கள் சொகுசான வாழ்வை வாழ்ந்துக்கொண்டு இருப்பதால் இதற்கு எல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்காது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: