Followers

Saturday, April 16, 2016

சனி பலன்

ணக்கம்!
          சனிக்கிரகம் ஐந்தில் இருக்கும்பொழுது நிறைய பேருக்கு நான்  குழந்தை பாக்கியம் மிகவும் கஷ்டம் என்று சொல்லிருக்கிறேன் ஆனால் இது ஒரு சிலருக்கு தவறாக நடந்து இருக்கிறது. நான் சொன்னது குழந்தை பாக்கியம் கிடையாது என்று சொன்னேன் நடைமுறையில் குழந்தை பாக்கியம் இருக்கின்றது.

ஒரு சிலருக்கு மட்டும் குழந்தை பாக்கியம் கஷ்டமாக இருக்கின்றது. ஒரு சிலருக்கு ஆண் குழந்தை இருக்கின்றது. பெரும்பாலும் தீமையான கிரகங்கள் ஐந்தில் பலமாக இருந்தால் அது ஆண்குழந்தையை கொடுக்கிறது.

சனிக்கிரகம் தன்னுடைய வேலை எப்படி காட்டுகிறது என்றால் பூர்வபுண்ணியத்தை விட்டு வெளியூர்க்கு செல்லவைக்கிறது. பெரும்பாலும் தன்னுடைய சொந்த ஊரை விட்டு வெளியில் செல்லவைத்துவிடும்.

ஒரு சிலருக்கு அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்க்கொண்டு அங்கு பணிபுரிந்துக்கொண்டு இருப்பார்கள். ஊரில் ஒரு நல்ல தொடர்பு என்பது இருக்காமல் இருக்கின்றது. 

இது எல்லாம் அனுபவத்தில் நடைபெற்றதை சொல்லுகிறேன். ஒரு சிலருக்கு பலன் மாறலாம். அவர் அவர்களின் சொந்த ஜாதகத்தை வைத்து பார்த்தால் தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: