வணக்கம்!
இந்த மாதத்தில் இருந்து தொடர்ந்து தஞ்சாவூர் பகுதியில் உள்ள கோவில்களில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் பகுதியில் உள்ள கோவில்களில் திருவிழா நடைபெற்றுவருவதால் நமது ஜாதககதம்பத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சி காத்திருப்பில் போட்டு வைத்திருக்கிறேன். விரைவில் ஏதாவது ஒன்றை நடத்திவிடுவோம்.
ராகுவைப்பற்றி பார்த்து வருகிறோம். ராகு கிரகத்திற்க்கு இவ்வளவு மதிப்பு கொடுத்து ஏன் எழுதவேண்டும் என்று பல நண்பர்கள் நினைக்கலாம். பல குடும்பங்களை சீரழித்தது எது என்றால் ராகு கிரகமாக இருக்கும் என்பதால் இதனை அதிகம் முக்கியத்துவம் கொடுத்து எழுதிவருகிறேன். அனைத்து கிரகத்தையும் எழுத தான் போகிறேன். கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும்.
பல குடும்பங்களுக்கு நான் சொல்லும் அறிவுரை ராகு கேதுவை பார்த்து நாம் வாழ கற்றுக்கொள்ளவேண்டும் என்பேன். ராகு மற்றும் கேதுவை உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வாழ்வை நகர்த்த வேண்டும்.
தேவைப்பட்டால் ராகு கேதுவிற்க்கு பரிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு உங்களின் ஜாதகத்தையும் அடிக்கடி கவனித்துக்கொள்ளுங்கள்.எவ்வளவு பிஸியான ஆளாக இருந்தாலும் ஜாதகத்தை பார்த்துக்கொள்வது நல்லது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment