வணக்கம்!
ஜாதககதம்பத்தில் சோதிடம் மற்றும் திருமண பொருத்தம் பார்ப்பதற்க்கு என்று குறைந்த கட்டணத்தை தான் வாங்கிக்கொண்டு இருக்கிறேன். இதில் திருமண பொருத்தம் பார்ப்பதற்க்கு என்று வாங்கும் தொகை மிக குறைந்த ஒன்று. இதனை செய்வது ஒரு சேவையாக இருக்கட்டும் என்பதால் இதனை செய்கிறேன்.
திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது நடக்கும் ஒரு விசயம் என்ன என்றால் ஒரு சில ஜாதகர்கள் நாம் என்ன தான் பார்த்து பார்த்து சொன்னாலும் அவர்களின் ராசியில் உள்ள பெண்ணை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். ஒரு சிலர் இப்படி தேர்ந்தெடுப்பது நடக்கும்.
ஒரே ராசியாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குள் திருமணம் நடத்தகூடாது என்று சொல்லுவது உண்டு. இருவருக்கும் ஒரே மாதிரியான பலன் நடக்க வாய்ப்பு அதிகம் இருக்கும். குடும்பத்தில் அதிக சண்டை வருவதற்க்கு வாய்ப்பு இருக்கும் என்பதால் இதனை தவிர்ப்பது நலம் என்று சொல்லுவது உண்டு.
ஒரு சிலர் பெண்ணை பார்த்து மயங்கிவிட்டு இந்த பெண்ணை தான் கட்டவேண்டும் என்று அடம்பிடித்து திருமணத்தை நடத்திக்கொள்வார்கள். நான் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்பதில்லை.
இது வேண்டாம் பா என்று சொன்னால் கூட அவர்கள் இதற்கு பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் சார் என்று சொல்லுவார்கள். ஒரு சிலருக்கு ஆண்டவன் இப்படியும் மாட்டிவிடுவது உண்டு. நீங்கள் திருமணம் செய்யமுடிவு எடுத்தால் கண்டிப்பாக ஒரு நலம்விரும்பிய விட்டு ஜாதகப்பொருத்தம் பார்த்துக்கொள்ளுங்கள். அவரே பெண் பார்க்கிறேன் ஜாதகத்தை பார்க்கிறேன் என்று கிளம்பினால் போதையில் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment