வணக்கம்!
ஒவ்வொருவருக்கும் குரு பலன் நன்றாக இருக்கவேண்டும் அப்பொழுது தான் எடுத்த காரியம் தடை இன்றி நடைபெறும். ஒருவருக்கு குரு தசா நடந்தால் அவர் எப்படிப்பட்ட தொழிலில் இருந்தாலும் அவர் அந்த தொழிலை போதிப்பவர்களாக இருப்பார்கள். வாத்தியார் வேலை பார்ப்பவராக மாறுவார்.
உங்களின் ஜாதகத்தில் குரு கிரகம் நன்றாக இருந்தால் நீங்கள் அடுத்தவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பீர்கள். பலருக்கு குரு கிரகம் சரியாக இருப்பதில்லை. எந்த வேலையை எடுத்தாலும் தடையாகவே அவர்களுக்கு இருக்கும்.
இன்றைய காலத்தில் குரு கிரகத்திற்க்கு சாய்பாபா வழிபாட்டை மேற்க்கொள்கிறார்கள். அதனை எல்லாம் செய்யவேண்டியதில்லை. குரு கிரகத்திற்க்கு குரு கிரகத்திற்க்கு தான் நீங்கள் வழிபாட்டை மேற்க்கொள்ளவேண்டும். குரு கிரகத்தை சாந்தப்படுத்த கூடிய வேலையில் நீங்கள் இறங்கி அதனை சரிசெய்துக்கொள்ளுங்கள்.
பாக்கியஸ்தானத்தை பற்றி நான் ஏற்கனவே சொல்லிருக்கிறேன். பாக்கியஸ்தானம் என்பது குரு கிரகத்தின் காரத்துவத்தை உடையவது. பாக்கியஸ்தானம் சொல்லும் விசயத்தில் நீங்கள் கவனம் செலுத்தும்பொழுது உங்களின் பாக்கியஸ்தானம் மற்றும் குரு கிரகம் வலுவடைந்துவிடும்.
குரு கிரகத்திற்க்கு ஆலங்குடி சென்று வழிபாடு மேற்க்கொள்ளலாம். அனுபவத்தில் ஆலங்குடி கோவில் நல்ல பலனை தருகிறது. உங்களுக்கு குரு தசா நடந்தாலும் குரு கிரகம் பாதிக்கப்பட்டாலும் ஒரு முறை சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment