வணக்கம்!
ஆயுள்காரகன் என்று அழைக்கப்படும் சனிக்கிரகம் தனக்கு பிடித்தமான நல்லெண்ணெய் குளியலை குளிப்பவர்களுக்கு அதிக ஆயுளை தருகிறார்.
நல்லெண்ணெய் குளியலைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிருந்தாலும் மறுமுறையும் இந்த பதிவை தரவேண்டிய ஒரு சில நிகழ்வுகள் நடந்தன அதனால் மறுமுறை இதனை தருகிறேன்.
எனக்கு தெரிந்த பல பெரியவர்கள் இன்றும் ஆராேக்கியத்தோடு இருப்பதற்க்கு அவர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் குளியலை குளிப்பதால் தான் அப்படி இருக்கின்றார்கள் என்பது தெரிந்தது.
பல பேருக்கு சனிக்கிரகம் தன்னுடைய தீமை பலனை தரும்பொழுது அவர்கள் நல்லெண்ணெய் குளியலை குளிக்க சொல்லுவேன். அதனோடு வாரந்தோறும் இந்த நல்லெண்ணெய் குளியலை குளித்தால் அவர்கள் வாழ்நாள் குறைவில்லாமல் இருப்பார்கள் என்பதையும் சொல்லுவது உண்டு.
உங்களுக்கு சனிக்கிரகம் பிரச்சினை தருகிறது என்றால் அருகில் உள்ள நவகிரகத்திற்க்கு சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் நல்லது. நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வதற்க்கு முன்பு நீங்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு செல்லுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment