வணக்கம்!
ஒரு தசா நடைபெற்றுக்கொண்டிருக்கும்பொழுது அந்த தசா நமக்கு நல்லது செய்கிறது என்றால் ஏதாவது ஒரு வழியில் நம்மை நோக்கி ஒரு அறிவுரை சொல்லுவதற்க்கு ஒரு ஆளாவது அனுப்பி வைக்கும்.
இன்றைய காலத்தில் ஒரு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் கஷ்டப்படுவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். சரியான வழிகாட்டுதல் இருந்தால் எளிதில் அனைத்தையும் சாதித்துவிடலாம். வழி இல்லாமல் கஷ்டபடுபவர்கள் அதிகம்.
எனக்கு ராகு தசா நடைபெறும் காலத்தில் ஒரு நபர்கள் கூட சரியான ஒரு வழிகாட்டுதலை சொல்லவில்லை. நான் பல சோதிடர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்கள் ஒரு நல்ல பரிகாரத்தை கூட சொல்லவில்லை. அவர்கள் சொல்லிருந்தால் ஒரளவு சமாளித்து இருந்து இருக்கலாம்.
இன்றைய காலத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் வழிகாட்டுதவற்க்கு எப்படியும் ஒரு சிலர் இருக்கின்றனர். இன்றைக்கு இருக்கும் தகவல் தொழில்நுட்பம் எப்படியும் நமக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. தகவல் தொழில்நுட்ப காலத்தில் கூட பல பேர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர்.
கஷ்டப்படுபவர்களுக்கு தசா நல்ல அறிவுரை சொல்ல ஆளை அனுப்புவதில்லை. தசாநாதன் நன்றாக இருந்தால் ஒரளவு நல்ல ஆளை அனுப்பி சமாளிக்க வைத்துவிடுவார்.
நான் சொல்லுவது சோதிடத்திற்க்கு மட்டும் அல்ல பல வேலைகளுக்கும் அறிவுரை சொல்லுவதற்க்கு ஆள்கள் தேவை. உங்களின் தசாநாதன் எப்படி இருக்கின்றான் சரியான வழிகாட்டி இருக்கின்றரா என்பதை சுயசோதனை செய்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment