வணக்கம்!
ராகு சந்திரன் இணைந்து பலனை கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். ராகு சந்திரன் நமது ஜாதகத்தில் சந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். சந்திரனோடு ராகு சேர்ந்தால் ஒரு தீயகிரகம் சேரும்பொழுது கண்டிப்பாக அது நல்ல பலனை கொடுத்துவிடாது.
மனக்காரகன் சந்திரன் என்கிறோம். மனக்காரகனோடு ராகு சேரும்பொழுது மனது எப்படி இருக்கும். பைத்தியம் பிடிக்காத குறை என்று கூட சொல்லிவிடலாம். ஒரு சிலருக்கு பைத்தியம் பிடித்துவிடுவதும் உண்டு.
நாம் நல்ல சிந்தனையோடு செயல்படும்பொழுது மட்டுமே நாம் எடுக்கிற காரியத்தை செய்யமுடியும். பல சிந்தனையில் இருந்தால் என்ன நடக்கும் காரியம் செய்யமுடியாது. வாழ்வில் வெற்றி பெறமுடியாது.
சந்திரனோடு ராகு சேரும்பொழுது மனம் தடுமாற்றத்தை உண்டுபண்ணும். மனம் தடுமாறினால் ஒரு வேலையும் செய்யமுடியாது. பாம்பு கிரகம் மனதைப்போட்டு உருட்டி எடுத்துவிடும்.
ராகு சந்திரன் உங்களுக்கு இணைந்து இருந்தால் முதலில் நீங்கள் மனதை எப்படி அமைதியாக வைத்திருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். அதன் பிறகு நீங்கள் வேலையில் இறங்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
any parigaram sir simple
Post a Comment