வணக்கம் !
ஒவ்வொரு நாளும் நிறைய பதிவுகளை எழுதவேண்டும் என்று தான் நினைக்கிறோம் ஆனால் இருக்கும் வேலை பளுவில் அதனை செய்யமுடியவில்லை. முடிந்தவரை நிறைய பதிவுகளை நம் நண்பர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரியும். நம்ம ஏரியாவில் வெயில் வாட்டி எடுக்கிறது என்பதை விட அக்னி பகவான் நேராக கீழே வந்துவிட்டார் என்பது போலதான் இருக்கின்றது.
நமக்கு வேலை என்பது கடும் வெயிலாக இருந்தாலும் சரி கடும் மழையாக இருந்தாலும் சரி அதனை செய்துவிடுவது உண்டு. இரவில் அமர்ந்து பதிவை எழுதிவிடுகிறேன். வெளியூர் அழைப்பு நிறைய இருக்கின்றது. அதனை எல்லாம் விரைவில் தொடங்குவோம்.
நம்ம ஆட்கள் அன்னதானம் எல்லாம் வெளியில் கடுமையாக செய்வார்கள் ஆனால் பெற்ற தாய் தகப்பனை வெளியில் அடித்துவிரட்டிவிட்டு இதனை எல்லாம் செய்வார்கள். இன்றைய காலத்தில் நிறைய விளம்பரம் செய்து அன்னதானம் எல்லாம் நடக்கிறது. உண்மையில் அன்னதானம் எல்லாம் செய்யவேண்டியதில்லை உங்களின் தாய் தகப்பனை நன்றாக வைத்திருந்தாலே போதும்.
நீங்கள் எதனை செய்தாலும் உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு உங்களால் பயன் இருக்கின்றதா என்பதை பாருங்கள். அவர்களுக்கு செய்துவிட்டு வெளியில் தற்பெருமை எல்லாம் அடித்துக்கொள்ளலாம். உங்களின் வம்சத்தில் உள்ளவர்களுக்கு உங்களால் உதவ முடிந்தால் அது தான் உண்மையான தானம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment