வணக்கம்!
நிறைய நண்பர்கள் தன்னுடைய முகநூலில் அல்லது மெயிலில் தொடர்புக்கொண்டு அவர்களின் ஜாதகத்தையும் அவர்களை பற்றியும் நிறைய எழுதி என்னிடம் ஆலோசனை கேட்கின்றனர். ஆலோசனை கேட்பதில் தவறு இல்லை இவர்களின் ஆலோசனை கேட்பது இலவசமாக கேட்கிறார்கள்.
இலவச சேவையை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மறுபடியும் அதனை தொடர்வது என்பது நேரில் சந்திக்கும்பொழுது மட்டுமே நடக்க கூடியது. என்னிடம் பணம் இல்லை என்றால் அதனை தாராளமாக சொல்லிவிட்டு என்னை நேரில் சந்தித்து ஆலோசனை கேளுங்கள்.
இப்படிப்பட்ட காலத்தில் எல்லாம் நான் வாழ்ந்து இருக்கிறேன். ஒவ்வொருவரின் வலியும் எனக்கு நன்றாக புரிகிறது அதற்கு நீங்கள் மெயிலில் அல்லது போனில் கேட்ககூடாது நேரில் வந்து கேட்டுக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்பொழுது இந்த ஊருக்கு வருகிறேன் என்று பதிவில் சொல்லிவிடுகிறேன். அந்த ஊரில் என்னை சந்திப்பதற்க்கு முன்பு இலவசமாக பார்க்கவேண்டும் என்று என்னை தொடர்புக்கொண்டு சொல்லுங்கள். அந்த ஊரில் கண்டிப்பாக நீங்கள் என்னை சந்தித்து ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment