வணக்கம்!
ராகு பலத்தைப்பற்றி பார்க்கலாம். ராகு ஒரு சிலருக்கு யோகம் அடிக்கும் கிரகமாக இருக்கின்றது. தற்பொழுது தேர்தல் சமயமாக இருக்கின்றது. தேர்தல் நேரம் என்பதால் இந்த பதிவு தேர்தலில் நிற்க்கும் ஆட்களுக்கு உதவும்.
உங்களுக்கு பெரும்பான்மையான ஓட்டு கிடைக்கவேண்டும் என்றால் அதற்கு ராகு நல்ல பலமாக உங்களின் ஜாதகத்தில் அமைந்தால் நிறைய ஓட்டுகள் விழுந்து நீங்கள் ஜெயிக்கமுடியும். ராகு தன்னுடைய பலத்தால் மக்களை எல்லாம் ஈர்த்து உங்களுக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்கும்.
இன்றைய காலத்தில் அரசியல் செய்யும் நபர்கள் எப்படி நல்லவர்களாக இருக்கமுடியும். ஒரு சமயத்தில் திடீர் முடிவுகளை எடுத்து ஒவ்வொருவரையும் கவிழ்ப்பது எல்லாம் நடக்கிறது. அதற்கு எல்லாம் காரணமாக அமையும் கிரகம் ராகு கிரகம்.
ராகு கிரகத்தை வைத்து செய்யப்படும் பூஜைகள் அதிகமுக்கியதுவம் வாய்ந்த பூஜைகள் இருக்கின்றன. அதனை எல்லாம் தற்பொழுது உள்ள அரசியல் தலைவர்கள் செய்துக்கொண்டு இருப்பார்கள்.
இரவில் பூஜை செய்வது எல்லாம் ராகு காரத்துவம் அதிகம் வாய்ந்த நபர்கள் செய்துக்கொண்டு இருப்பார்கள். இதில் சும்மா ஒன்றும் தெரியாமல் செய்துக்கொண்டு இருக்கும் சாமியார்களும் இருக்கின்றனர். இவை அனைத்திற்க்கும் காரத்துவம் வகிப்பது ராகு கிரகம் தான்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment