வணக்கம்!
எந்த ஒரு சோதிடர்களிடமும் நீங்கள் சென்று உங்களின் ஜாதகத்தை காண்பித்தால் ஏதாவது பாட்டு பாடி சொல்லிவிட்டு கோச்சாரபலனை சொல்லிவிட்டு யாரிடமும் உங்களின் ஜாதகத்தை காட்டாதீர்கள் என்று சொல்லிவிடுவார்கள். பெரும்பாலான சோதிடர்கள் இதனை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
தசாநாதனைப்பற்றி நாம் கேட்டால் அதனைப்பற்றி அதிகம் சொல்லுவதில்லை. அதற்கு காரணம் தசாநாதனைப்பற்றி அறிவு குறைவு. உங்களின் சோதிடர்களிடம் தசாநாதன் எப்படி வேலை செய்கிறது என்பதைப்பற்றி கேட்டுக்கொள்ளுங்கள். தசாநாதனுக்கு எப்படி பரிகாரம் செய்யவேண்டும் எனப்தைப்பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
தசாநாதனுக்கு பரிகாரம் செய்யும்பொழுது தசாநாதனை நன்றாக கவனித்து அதற்கு பரிகாரம் செய்யவேண்டும். தசாநாதன் ஒரு சிலருக்கு சிக்கலில் சென்று அமர்ந்து இருப்பார். அதற்கு பரிகாரம் செய்பவர்களிடம் சென்று தான் பரிகாரம் செய்யவேண்டும்.
ஒரு சிலருக்கு தசாநாதன் தனியாக பிரச்சினை இல்லாமல் நல்ல வீட்டில் அமர்ந்து இருப்பார்கள். அப்படிப்பட்ட தசாநாதனுக்கு சம்பந்தப்பட்ட ஜாதகரே பரிகாரம் செய்துக்கொள்ளலாம்.
உங்களின் ஜாதகம் அதிகபடியாக பாதிக்கப்டும்பொழுது நல்ல பரிகாரம் செய்பவர்களிடம் சென்று பரிகாரம் செய்யவேண்டும். ஜாதகம் நன்றாக இருந்தால் கோவில் வழிபாட்டிலேயே சரிசெய்துக்கொள்ளமுடியும்.
உங்களின் ஜாதகத்தைப்பார்த்து தான் அனைத்தையும் தெரிந்துக்கொள்ளமுடியும்.
ஒரு நாளைக்கு மூன்று பதிவாவது தரவேண்டும் என்பது எண்ணம் இரண்டு பதிவு தான் தரமுடிகிறது. கடுமையாக மின்தடை ஏற்படுகிறது. பல மணி நேரம் நான் இருக்கும் பகுதியில் மின்சாரம் வருவதில்லை. அதனால் குறைவாக பதிவு தருகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment