வணக்கம்!
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் இந்த ஆண்டு முழுவதும் நன்மை அதிகம் நடக்க அம்மனை பிராத்திக்கிறேன்.
உங்களின் ஜாதககதம்பம் இன்று ஏழாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஜாதககதம்பத்திற்க்கு ஆதரவு தரும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி. தொடர்ந்து ஆதரவை தாருங்கள்.
ஆன்மீகத்திற்க்கு உயிர்கொடுத்த குருவின் பாதம் பணிந்து அம்மன் அருள் வேண்டி இந்த நேரத்தில் பிராத்திக்கிறேன். அனைவருக்கும் நல்லதை முடிந்தளவு செய்யவேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன். ஜாதககதம்பத்தில் சொல்லப்படும் கருத்துக்களை வாய்வழியாக அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். ஜாதககதம்பம் என்ற ஒன்று இருப்பதை உங்களின் தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
நிறைய பதிவுகள் நிறைய கருத்துக்களை தரவேண்டும் என்று நினைக்கிறேன். நிறைய கருத்துக்கள் என்று வரும்பொழுது ஒரு சில கட்டுபாட்டோடு செய்யவேண்டியுள்ளது. பதிவு திருட்டு நடப்பதால் கருத்துக்களை சொல்லுவது கொஞ்சம் குறைவாக இருக்கின்றது. இதனை நீங்கள் புரிந்துக்கொண்டு என்னை சந்திக்கும்பொழுது கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். கட்டண பதிவும் இருக்கின்றது உங்களால் முடிந்தால் அதில் இணைந்துக்கொள்ளலாம்.
இந்த வருடமும் நிறைய பதிவுகளை தரவேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொள்கிறேன் அதே நேரத்தில் அம்மன் பூஜைக்கு என்று காணிக்கை செலுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். இவர்களின் ஒத்துழைப்பால் பல வருடங்கள் தொடர்ந்து அம்மன் பூஜை நடந்து வருகின்றது. தொடர்ந்து நடத்த உங்களின் ஒத்துழைப்பு தேவை. ஜாதககதம்பத்தை படிக்கும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறையை நன்றியை தெரிவிக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
அய்யா வணக்கம் . ஜாதக கதம்பம் 7ம் ஆண்டில் இனிய துவக்கம் . மகிழ்ச்சி . தொடரட்டும் உங்கள் ஜோதிட பணி. அம்மனின் அருட் கடாட்சம் நிறைய உங்களுக்கு கிடைக்கும்.
சோமசுந்தரம் பழனியப்பன்
மஸ்கட்
Post a Comment