Followers

Monday, April 11, 2016

திருமணம்


வணக்கம்!
          பெரும்பாலான திருமணம் நடக்கும் விதம் என்பது கிரகங்கள் கொண்டுபோய் ஒருவரை வீழ்த்துவது தான் நடக்கும். உங்களுக்கு திருமணம் நடக்கிறது என்றால் அது கிரகங்களின் படுமுயற்சியால் நடக்கிறது என்று அர்த்தம்.

மனிதர்கள் எல்லாம் கூடி திருமணத்தை நடத்துகிறோம் என்று நாம் நம்பிக்கொண்டு இருப்போம் ஆனால் கிரகங்கள் தான் இந்த வேலையை செய்ய தூண்டுகிறது. நீங்கள் சோதிடம் நன்றாக படித்து இருந்தால் மிகச்சரியாக இதனை அறிந்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு வேலையையும் ஒரு ஆள் இருந்து உங்களுக்கு செய்வது போல் கிரகங்கள் செய்யும். திருமணம் செய்யும் மாப்பிள்ளை ஒரு வித போதையில் இருப்பது போலவே இருப்பார். உண்மையில் நாம் பெண் போதை என்று இருப்போம் அது கிடையாது. அவனை இல்லறத்தில் சிக்கவைக்க கிரகங்கள் கொடுக்கும் போதை.

நிறைய தவறுகள் நடப்பதே இப்படி ஒரு போதை கிளப்பி அவனை சிக்கவைப்பதால் தான். ஒரு தெளிவான ஒரு நபர் இருந்தால் இதனை எல்லாம் சரி செய்து எந்த ஒரு தவறுகளும் நடைபெறாமல் செய்யமுடியும். கிரகங்கள் கொண்டுபோய் அமுக்கி ஒருவரை முழ்கடிப்பதில் இருந்து ஒரளவு காப்பாற்றிக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: