வணக்கம்!
ராகு சூரியன் கூட்டணியைப்பற்றி பார்த்து வருகிறோம். இராகு மற்றும் சூரியன் கூட்டணியாக லக்கினத்தில் அமர்ந்தால் அவருக்கு உடல் சூடு இருந்தாலும் அவருடைய தந்தை வழியில் உள்ளவர்களால் அவர்களின் உடலில் காயப்பட்டு இருக்கும்.
இராகு சூரியன் லக்கினத்தில் அமரும்பொழுது அதிகபடியான முடி உதிர்தல் இருக்கும். ஒரு சிலருக்கு ஏறு நெற்றிப்போல் இருக்கும். உடலில் அடிக்கடி விஷ கடி இருக்கும். முடி உதிர்தலுக்கு ராகு மற்றும் சூரியனுக்கு இரண்டுக்கும் பரிகாரம் செய்யுங்கள்.
லக்கினத்தில் இருப்பதும் மற்றும் ஆத்மாகாரன் என்று அழைக்கப்படும் சூரியனோடு சேர்ந்து இருப்பதால் அடிக்கடி ஆத்மா பிரச்சினையில் மாட்டும். அதாவது ஏதாவது ஆன்மீக ரீதியில் பிரச்சினை இருக்கும். உங்களுக்கு நன்றாக புரியும் படி சொல்லவேண்டும் என்றால் ஆத்மாவில் ஏதாவது ஒன்று புகுந்து பிரச்சினையை எழுப்பும்.
நமது ஜாதககதம்ப பதிவை பள்ளி குழந்தைகளும் படிப்பதால் அதிகப்படியான ஆன்மீகத்தை சொல்லுவதில்லை. குழந்தைகள் பயப்படகூடாது என்பதால் அதனை எல்லாம் விட்டு பல காலம் ஆகிவிட்டது.
லக்கினத்தில் அமரும் இந்த கூட்டணி அந்தளவுக்கு நன்மை பயப்பது கிடையாது. தந்தை மட்டும் கொஞ்சம் உதவி செய்பவராக இருக்கலாம். அவர் அவர்களின் ஜாதகத்தை பொறுத்து பலன் மாறுபடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment