வணக்கம்!
தொழிலாளர்களை குறிக்கும் கிரகம் சனி. சனிக்கிரகம் நன்றாக இருந்தால் ஒருத்தருக்கு நல்ல தொழிலையும் அந்த தொழில் நன்றாக நடக்க உறுதுணையாக இருக்கும் தொழிலாளர்களும் அமைவார்கள்.
தொழில் நடந்தால் தொழிலாளர்கள் ஒழுங்காக அமைவதில்லை இதற்கு காரணம் என்ன என்று பார்க்கும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகரின் சனிக்கிரகம் கொஞ்சம் வில்லங்க வேலையை செய்வதால் இப்படி அமைகிறது.
ஒவ்வொருவரின் தந்தை ஏதோ ஒரு தொழில் செய்து அந்த தொழிலாளர்களுக்கு ஒழுங்கான சம்பளம் கொடுக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சனிக்கிரகம் நன்றாக அமைவதில்லை. நாம் ஒரு தொழில் செய்தால் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை கொடுத்துவிடவேண்டும். அப்படி நாம் நடந்துக்கொள்ளும்பொழுது தான் சனிக்கிரகம் நமக்கு நல்லதை செய்யும்.
நான் ஒரு இடத்தில் பார்த்தேன். அங்கு வேலை செய்யும் வேலையாட்களுக்கு தண்ணீர் கொடுப்பதில்லை தண்ணீரை அவர்களே வாங்கிக்கொள்ளவேண்டும் என்ற நிலை இருந்தது. ஒரு முறை நான் அவர்களிடமே சொன்னேன். இப்படி செய்யாதீர்கள் என்றேன். அந்த முதலாளி கேட்கவே இல்லை. தற்பொழுது அந்த கம்பெனி இல்லை.
எந்த ஒரு வேலையையும் செய்யும் தொழிலாளிக்கும் நாம் ஒழுங்காக சம்பளத்தை கொடுத்துவிடவேண்டும். அப்படி கொடுக்கும்பொழுது மட்டுமே நமது தொழிலையும் நமது சந்ததினர்க்கு சனி நல்ல நிலைமையிலும் அமையும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment