வணக்கம்!
தசாநாதன் ஒவ்வொரு வாழ்க்கையும் தீர்மானிக்கிறது. மனிதனுக்கு வரும் தசாநாதனில் ஒரு தசா நன்றாக இருந்தாலே போதும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செல்வவளத்தையும் பெற்றுவிடுவான்.
நல்ல தசாவும் நாம் நல்ல முறையில் இளைஞர்களாக இருந்த காலத்தில் வந்துவிட்டால் அவன் கொடுத்துவைத்தவனாக இருப்பான். இளமை காலத்தில் வரும்பொழுது அவனால் நன்றாக ஓடி உழைத்து அதிக பொருளை ஈட்டமுடியும்.
வயதான காலத்தில் நல்ல தசா வரும்பொழுது தேவையானவை கிடைக்கும் ஆனால் அந்த தேவைகள் அனைத்தும் பல தேவைகளுக்கு சென்றுவிடும். சுற்றி உள்ளவர்களுக்கு செய்யவேண்டிய இருப்பதால் அதனை பங்கிட்டுக்கொள்ள ஆட்கள் இருப்பார்கள்.
இப்பொழுது உடலில் பலம் இருக்கின்றது ஆனால் தசா ஒத்துழைக்கவில்லை என்று நினைப்பவர்கள் தசாநாதன் யார் என்று பாருங்கள். அவர் எப்படி செயல்படுகிறார் என்பதையும் பார்த்துவிட்டு அவருக்கு உரிய பரிகாரத்தை செய்ய பாருங்கள். பெரிய முன்னேற்றம் காணமுடியும்.
மிகச்சரியான ஒரு பரிகாரத்தை நாம் செய்துவிட்டால் ஒவ்வொரு தசாவும் நல்லமுறையில் நாம் பலன்கொள்வது போல இருக்கும். கெடுதல் தசாவாக இருந்தால் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை என்றாலும் ஒரளவு கொடுக்க வைத்துவிடலாம்.
காலம் சென்றுக்கொண்டே இருக்கும் நாம் நினைத்ததை அடையவேண்டும் என்றால் ஏதாவது ஒன்றை செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் இருப்பவர்கள் உங்களின் ஜாதகத்தை கொஞ்சம் எடுத்து பாருங்கள். பார்த்துவிட்டு என்னை வந்து சந்தியுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment