Followers

Tuesday, April 12, 2016

கிரகபாதிப்பு பரிகாரம்


வணக்கம்!
          கிரகங்கள் பாதிப்பில் இருந்து வெளிவருவது என்றால் ஒரு சில விசயங்களை நாம் அவ்வப்பொழுது செய்யவேண்டும். என்ன என்றால் தன்னை வருத்திக்கொள்வது.

மாதத்திற்க்கு ஒரு நாள் நன்றாக கஷ்டப்படவேண்டும். உடல் உழைப்பு இல்லாதவர்கள் உடல் உழைப்பை செய்யவேண்டும். அப்பொழுது உங்களின் கஷ்டம் கொஞ்சம் குறையும். 

நான் ஒரு விவசாயி மகன் அவ்வப்பொழுது விவசாய வேலை பார்ப்பது உண்டு. மாதத்திற்க்கு ஒரு நாள் வெயிலில் நாள் முழுவதும் வேலை செய்வேன். இந்த மாதம் எல்லாம் மிக கடுமையான ஒரு வெயில் அடிக்கிறது அப்படி இருந்தும் ஒரு நாள் ஒதுக்கி அந்த வேலையை செய்வது உண்டு.

ஒரே சொகுசாகவும் இருந்துவிடகூடாது. ஒரே கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்துவிடகூடாது அப்பொழுது இரண்டையும் பார்த்துவிட்டால் கிரகங்கள் நம்மை பெரிய அளவில் பாதிக்காது.

A/c போட்டுக்கொண்டு மாதம் தோறும் தூங்கினாலும் ஒரு நாள் A/c ஆப் செய்துவிட்டு தூங்குங்கள். இது கஷ்டம் தான் இருந்தாலும் என்றாவது ஒரு நாள் இந்த உடலை நெருப்பு திங்க தானே போகின்றது அப்படி நினைத்துக்கொள்ளுங்கள்.

நான் சொன்னதை தான் முன்னோர்கள் விரதம் என்ற முறையில் கொண்டு வந்தார்கள். விரதம் இருக்கின்றதாக இருந்தாலும் இருக்கலாம். அது தன்னை நன்றாக வருத்துவது போல் இருந்தால் நல்லது

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: