Followers

Friday, April 15, 2016

தசாவின் கெடுதல்


ணக்கம் !
          ஒருவருக்கு வினை என்பது ஆரம்பித்தவிட்டால் அதாவது நமக்கு கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டால் அந்த நேரத்தில் சும்மா இருப்பது நல்லது. எந்த வித காரியமும் ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது. கெட்ட நேரத்தில் ஏதாவது ஆரம்பிக்கும்பொழுது மேலும் மேலும் அதனால் சிக்கல் தான் வரும். நல்லது வராது.

பெரும்பாலும் ஒருவருக்கு நடக்கும் தசா அந்த நபருக்கு கெடுதலை தரஆரம்பித்துவிட்டால் அவரால் நிலைத்து நிற்கமுடியாது. எந்த ஒரு விசயத்திலும் தன்னுடைய கெட்ட வேலையை காட்டிவிடும்

.நிறைய ஆன்மீகவாதிகளை நான் சந்தித்து இருக்கிறேன். அதில் தன்னுடைய குடும்பம் அடிப்பட்டதால் அவர்கள் ஆன்மீகத்தை நோக்கி வந்து இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. அதாவது தன்னுடைய குடும்பம் கடுமையான வறுமை அல்லது நோயின் பிடியில் மாட்டிக்கொண்டு சிதைந்த காரணத்தால் வந்தேன் என்று சொல்லிருக்கிறார்கள்.

ஒருவருக்கு ஒரு தசா நடக்கும்பொழுது அந்த நபரின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஒரே மாதிரி தசா நடக்கிறது என்பது காணமுடிகிறது. நான்கு பேர் இருக்கும் குடும்பத்திற்க்கு குறைந்தது மூன்று பேருக்காது ஒரே மாதிரி தசா நடக்கிறது.

மிகச்சரியான ஒரு ஆன்மீக வழிகாட்டி இப்படிப்பட்ட தசாவில் இருந்து காப்பாற்றுவார். கெடுதலான தசாவில் உள்ள அதிகப்படியான கெடுதலை குறைக்க வழிசெய்வார். உங்களுக்கு இப்படிப்பட்ட தசா நடந்தால் ஒரு நல்ல நபரை தொடர்புக்கொண்டு இந்த இன்னல்களை குறைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: