வணக்கம்!
ஜாதகத்தின் பாதிப்பால் நமக்கு ஏற்படும் பிரச்சினையை சரி செய்வதற்க்கு நிறைய வழிகள் இருந்தாலும் ஒரு சிலர் பின்பற்றுவது அவர்களே அவர்களை சரிச்செய்துக்கொள்ள வழி தேடுவதும் ஒரு வழி.
தனக்கு ஏற்படும் பிரச்சினையை தானே சரிசெய்துக்கொள்ள நினைப்பது தவறு இல்லை. நீங்கள் இந்த பிரச்சினையை சரிசெய்துக்கொள்ள நாடும் வழி மிகச்சரியாக இருக்கவேண்டும். கோவில் மற்றும் புண்ணியநதிகளில் நீராடி உங்களின் பிரச்சினையை சரிசெய்துக்கொள்ளலாம் ஆனால் மந்திரவழியில் சரிசெய்துக்கொள்கிறேன் என்று நீங்களே மந்திரத்தை படிக்கும்பொழுது தான் பிரச்சினை வந்துவிடும்.
மந்திரங்களை நாம் சொல்லவேண்டும் என்றால் அதற்கு முறையான தீட்சை பெறவேண்டும். தீட்சை பெறாமல் நாம் மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தால் அதனால் பிரச்சினை அதிகமாகுமே தவிர குறையாது. மந்திரங்கள் என்று வரும்பொழுது நாம் புத்தகத்தை படித்துவிட்டு அதனை சொல்லக்ககூடாது. முறையான ஒரு குருவிடம் மந்திரத்தை பெற்று அதனை உச்சரிக்கவேண்டும்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு வழி கிடைக்குமா என்று மந்திரத்தை உச்சரிக்க தொடங்கிவிடுகின்றனர். அது தவறு இல்லை அதே நேரத்தில் அந்த மந்திரத்தை ஒரு குரு அல்லது பெரியவர் உங்களிடம் சொல்ல சொல்லி அதனை மந்திர உரு ஏற்றுங்கள். மந்திரத்தை பெற்றுவிட்டு அதன் பிறகு அதனை உரு ஏற்றி அதனை கொண்டு உங்களின் பிரச்சினையை சரிசெய்துங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
In the picture of Markandeya, it seems that Siva is raising His right foot, against Yama. As per available information, Siva used His left foot. Thank you,
Post a Comment