Followers

Wednesday, April 13, 2016

புதன் பலன்


வணக்கம்!
          புதன் கிரகம் ஒருவருக்கு வலுவாக இருந்தால் நல்ல அறிவு இருக்கும். நல்ல அறிவு என்றால் பிறர்க்கு வழிகாட்டும் ஒரு அறிவை பெற்று இருப்பார்கள். பெரும்பாலும் புதன்கிரகம் சோதிடர்களுக்கு நல்லதாகவே அமையும் புதன் கிரகத்தின் வலு நன்றாக இருக்கும்பொழுது சொல்லும் பலனும் நன்றாக அமையும்.

கணக்கு சம்பந்தப்பட்ட விசயத்திற்க்கு புதன் கிரகம் தான் காரணம் வகிக்கிறது. புதன் கிரகம் வலுவாக இருப்பவர்கள் பெரும்பாலும் கணக்கியல் துறையில் வேலை செய்பவர்களாக இருப்பார்கள்.

நிதி சம்பந்தப்பட்ட விசயத்தில் புதன் கிரகம் காரத்துவம் வகிக்கிறது. புதன் கிரகம் ஒருவர்க்கு நன்றாக அமைந்தால் அவர் நிதி ஆலோசகராக இருப்பார். உலகத்தில் உள்ள பெரும்பணக்காரர்களுக்கு எல்லாம் புதன் கிரகம் நன்றாக இருக்கும். 

இன்றைக்கு பல பேர்களுக்கு புதன் கிரகம் சரியாக இருக்காது. புதன் எதனோடு சேருகிறதோ அதாவது எந்த கிரகத்தோடு சேருகிறதோ அந்த தன்மையை கொடுக்கும் தன்மையுடையது. தனித்து இருந்தால் முழுபலனையும் எதிர்பார்க்கலாம்.

ஒரு சிலருக்கு புதன் பிற கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலும் நல்லபலனை கொடுக்கிறது. சேரும் கிரகம் நல்ல கிரகமாக இருந்தால் அதன் காரத்துவத்தையும் எடுத்து நல்லதை செய்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: