வணக்கம்!
ஒருவருக்கு சனிதசா நடந்துக்கொண்டிருந்தால் அந்த நபர் பெரும்பாலும் தன்னை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தமாட்டார். எப்பொழுதும் அழுக்கு மாதிரி காட்சி அளிப்பார்.
ஒரு நபருக்கு சனிதசா நடந்ததது அவரை நான் பார்த்து இருக்கிறேன். அவர் குளிப்பது கூட அதிகம் கிடையாது. வாரத்திற்க்கு ஒரு முறை குளிப்பதாக சொன்னார்கள். சனி கிரகம் அப்படிப்பட்ட கிரகம் அதனால் அவர் அப்படி நடந்துக்கொண்டு இருப்பார்.
பல தொழிலாளர்களுக்கு அதாவது அடிமட்ட வேலை செய்யும் நபர்களுக்கு பெரும்பாலும் சனிதசா நடைபெறுவதை நான் பார்த்து இருக்கிறேன்.அவர்கள் அனைவரும் இப்படி தான் இருப்பார்கள். அடிமாடு போல் தான் பெரும்பாலும் வேலை செய்வார்கள்.
ஒவ்வொருவரும் குளித்துவிட்டு சுத்தமாக தான் இருக்கவேண்டும் ஆனால் இவர்கள் இப்படி இருந்துக்கொண்டு எந்தவித நோயும் இல்லாமல் இருப்பார்கள் அதற்கு முழுக்காரணமும் சனிக்கிரகத்தையே சாரும்.
சனிதசா தன்னைபோலவே ஒருவரை உருவாக்கிவிடும். நாள்முழுவதும் வேலை பார்ப்பதனால் கருப்பு நிறத்திற்க்கு மாறிவிடுவார்கள்.உங்களுக்கு சனி தசா நடந்தால் இப்படிப்பட்ட நிலை உருவாகலாம் அந்த நேரத்தில் சனிக்கிரகத்திற்க்கு பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment