Followers

Friday, April 29, 2016

ராகு சந்திரன் கூட்டணி பலன்


வணக்கம்!
          ராகு சந்திரன் இணைந்து இருந்தால் என்ன பலன் என்பதைப்பற்றி பொதுவாக பார்த்து வருகிறோம். சந்திரனை வைத்தே பல பலன்களை சொல்லிவிடலாம். ராகு சந்திரன் இணைந்து இருந்தால் பொதுவாக திருமண வாழ்வு என்பது அவர்களின் சாதியில் இருந்து வேறு சாதியில் உள்ளவரை மணக்ககூடிய வாய்ப்பை உருவாக்கும். ஒரு சிலருக்கு மதம் விட்டு மதம் மாறிக்கூட திருமணம் செய்ய வைக்கும்.

எனக்கு பழக்கப்பட்ட ஒரு சாமியார் இருந்தார். அவர் சிறந்த ஞானியும் கூட அவர் என்னிடம் சொன்னார். ராகு என்ற கிரகத்தால் பல பேர்கள் தன்னுடைய மதம் அல்லது சாதியை விட்டு திருமணம் செய்கிறார்கள். இது ஒரு தவறான செயல் என்று சொன்னார்.

வெளிநாட்டுக்காரன் இந்த விசயத்தில் சரியாக இருக்கிறான் ஆனால் நம்ம ஆட்கள் இதில் சரியாக இல்லை என்றும் சொன்னார். ஒரு மதம் விட்டு அடுத்த மதத்திற்க்கு சென்று திருமணம் செய்தால் அவர்களின் வாழ்க்கையிலும் பல பிரச்சினை இருக்கும். அதோடு அவர்கள் மோட்சம் என்ற பாதையில் செல்லமுடியாது என்றும் சொன்னார்.

நாகரீக உலகம் என்று சொல்லிக்கொண்டு நாம் மாற்றுபாதையில் செல்கிறோம். திருமணம் என்பது உங்களின் பெற்றோர்கள் பார்த்து செய்தால் நல்லது என்பது ஒரு ஆன்மீக கருத்து. இதற்கு மாற்றுகருத்துகூட வரலாம் ஆனால் சொல்லவேண்டியது நமது கடமை

ராகு சந்திரன் உங்களின் வாரிசுகளுக்கு இணைந்து இருந்தால் கொஞ்சம் கவனமாக இருங்கள். இதற்கு மாற்று ஏற்பாடாக என்ன செய்லாம் என்றால் திருமணத்தின் பொழுது பிற மதத்தில் உள்ளவரை கூப்பிட்டு தாலி எடுத்துக்கொடுக்க வைக்கலாம்.

ராகு சந்திரன் இணைந்து இருந்தால் என்னிடம் சோதிடம் பார்க்க வருபவர்களுக்கு முன் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ளுங்கள் என்பேன். அவர்களும் சரி என்று பார்த்துக்கொண்டு அவர்களின் குலத்திற்க்குள் திருமணத்தை முடிவு செய்துவிட்டு என்னிடம் சொல்லுவார்கள். திருமணத்தின் பொழுது பிறமதத்தில் உள்ளவரை கூப்பிட்டு தாலி எடுத்துக்கொடுக்க சொல்லசொல்லுவேன். அதுபோல் செய்வார்கள். தம்பதிக்குள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: