வணக்கம்!
நமது முன்னோர்கள் ஆன்மீகத்திற்க்கு எதிராக இருந்தார்கள் என்றால் நாம் திருமணம் செய்ய கஷ்டப்படவேண்டும். நமக்கு திருமணம் என்பது நடக்காமல் போய்விடும்.
இன்றைய இளைஞர்களுக்கு திருமணம் நடப்பது கொஞ்சம் கடினமாகவே இருக்கின்றது. அதுவும் இருவீட்டார் சம்மதத்தோடு அரேஞ்சுடு மேரேஜ் நடப்பது எல்லாம் கஷ்டமாகவே உள்ளது. இதற்கு எல்லாம் குரு கிரகம் தன் பலனை கொடுக்காமல் செல்வதால் நடக்கிறது.
நமது முன்னோர்கள் ஆன்மீகத்திற்க்கு எதிராக அல்லது ஆன்மீகவாதிகளுக்கு எதிராக நடக்கும்பொழுது நமக்கு குரு கிரகம் சாதகமாக அமையாது. எந்த கிரகம் எப்படி இருந்தாலும் குரு கிரகம் கொஞ்சமாவது நன்றாக அமைந்தால் மட்டுமே பல விசயங்கள் நமக்கு சாதகமாக அமையும்.
குரு கிரகம் நன்றாக அமைந்துவிட்டால் உடனே திருமணம் நடைபெற்றுவிடும். திருமணபேச்சை எடுத்தவுடன் திருமணம் நடந்துவிடும். குரு கிரகம் சரியில்லை என்றால் சோதிடர்களுக்கு பொருத்தம் பார்க்க பணம் கொடுத்த அழிந்துவிடுவார்கள்.
முக்கால்வாசி பிராமணர்களுக்கே குரு கிரகம் சரி இல்லாமல் அமைந்து இருக்கின்றது. முன்னோர்கள் செய்த தீவினை என்று தான் இதனை எடுத்துக்கொள்ளவேண்டும்.
குரு கிரகம் சரியில்லை என்றவுடன் சாய்பாபா கோவிலுக்கு சென்று வாருங்கள் என்று இந்த காலத்து சோதிடர்கள் எல்லாம் சொல்லிவிடுவார்கள். நாமும் பழைய பதிவில் இதனை சொல்லிருக்கிறோம். சாய்பாபா வருவதற்க்கு முன்பே குரு கிரகம் இருக்கின்றது அதனால் குரு கிரகத்தை மட்டும் வணங்கினால் போதும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment